சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கோவை, நவம்பர் 10

கோவை மத்திய சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பிரபாகரன், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மயங்கி விழுந்தார்.

சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் 3 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனைக் கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கனியூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு தொடர்பாக சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட போது, பிரபாகரன் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...