ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம் உள்பட 190 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை



நவம்பர் 9: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி, தினகரன் மற்றும் சசிகலா உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போதய தகவலின் படி 190 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிய  வருகிறது.அதில் சசிகலாவின் எல்லா உறவினர்கள் வீடுகளும் அடங்கும் . கொடநாடு எஸ்டேட்  உட்பட அ.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 



இதேபோல் ஜெயா டிவி தொடர்புடைய இடங்கள், ஜெயா டிவியை நிர்வகித்து வரும் விவேக், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகள், கோடநாடு எஸ்டேட் என ஏராளமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.



இந்நிலையில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.அலுவலகம்,  ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதனால் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, தினகரன் அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக்கிற்கு சொந்தமான இடங்கள், திருவாரூரில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீடு, சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அதிமுக சசிகலா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.



ஜெயா டிவி மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் ஒரே சமயத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...