கோவை, நவம்பர் 6: கோவையில் கந்து வட்டி கொடுமையால் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா (35). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் மகன் உள்ளார்.
இந்த சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கி முன் நித்யா வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதற்காக செம்மேடு பகுதியை சேர்ந்த நிஷா என்பவரிடம் ரூ.1.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.
அதே நேரத்தில் நித்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் குறித்த நேரத்தில் கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக நிஷா அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்யா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பணி முடிந்து வீடுதிரும்பிய பாலகிருஷ்ணன் நித்யா மயங்கிக் கிடப்பதை பார்த்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.