கோவை அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து கார் சேதம் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

கோவை, நவம்பர் 6: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்ததில் அருகில் நின்று கொண்டிருந்த காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.



கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையின் கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதோடு, நோயாளிகள் தங்குவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, அம்மருத்துவமனை வளாகத்தில் ரூ.55 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டு புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன. 

பழைய கட்டிடங்களில் இருந்த பல்வேறு வார்டுகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. 

அப்போது நரம்பியல் துறை வார்டும் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பழைய நரம்பியல் துறை வார்டில் அரசு மருத்துவமனை ஆவண காப்பகம் மற்றும் குழந்தைகள் பிரிவு செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கட்டிடத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 'சன்சைடு' (Sunshade) இன்று மதியம் திடீரென் இடிந்து விழுந்தது. 



இந்த விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரின் காரின் முன்பக்க கண்ணடி உடைந்து சேதமடைந்தது. 

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அம்மருத்துவமனைக்கு வந்துசெல்வோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் செயல்படும் பழைய கட்டிடங்களில் முதன்மையாக புனரமைக்கப்பட வேண்டிய கட்டிங்களுள் ஒன்றாக நரம்பியல் துறையின் பழைய கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால், இதுவரையில் கட்டிடத்தை புனரமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கவில்லை' என்றார். 

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையில் கட்டிடம் பழுதாகியுள்ளது என்றும், உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவர்களின் அலட்சியப்போக்கை காட்டுவதாகவும் இந்த விபத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...