டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை சிட்கோ தொழிற்சாலை வளாகம் மற்றும் கிழக்கு மண்டலம் நேரு நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ப.காந்திமதி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.



கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



அதன்படி, இன்று மதுக்கரை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டபோது, ஈச்சனாரி சிட்கோ தொழில்நிறுவனங்கள் வளாகத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏடிஸ் கொசுப்புழு உள்ளதை கண்டு அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சுகாதாரம் பேணிக்காக்காமல், ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழலை கொண்டிருந்த நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதமும் விதித்தார்.

இதேப்போன்று, மாநகராட்சி துணை ஆணையர் கிழக்கு மண்டலம், 34-வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...