உதகையில் 768 பேருக்கு பணி நியமன ஆணைகள்

நீலகிரி, அக்டோபர் 29: நீலகிரி மாவட்டம், உதகை எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 768 வேலைவாய்ப்பற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பணிநியமன ஆணைகளை வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:- இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுடன் வந்துள்ள இளைஞர்களை பார்க்கும்போது, மிகவும் சந்தோசமாக உள்ளது. இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஒவ்வொரு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு வரும்போதுதான் நமக்கான வேலை நம்மை தேடி வரும். இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று வீட்டிலேயே முடங்கினால் சந்தர்ப்பம் வரும்போது நாம் அதை இழக்க நேரிடும். வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

தற்போது டெங்கு நோயினை முழுவீச்சில் கட்டுப்படுத்த நமது தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்து, நமது வீட்டையும், நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து, டெங்கு போன்ற எந்தவித நோய்களும் வராமல் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும்.

இம்முகாமில் மொத்தமாக 2073 பேர் கலந்து கொண்டு, அதில் 768 பேர் பல்வேறு தனியார் துறைகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டள்ளனர் என்றார். 

இம்முகாமில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ.ரமேஷ் குமார், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி.சுப்ரமணியன் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...