பெங்களூரூ விமான நிலையத்தின் ஏர்-கார்கோ முனையம் கோவையில் தொடக்கம்

பெங்களூரூ சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையம் கோவை மாவட்டம் இருகூரில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள கண்டெய்னர் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் ஒருங்கிணைந்த கண்டெய்னர் டெப்போவில் இருந்து பெங்களூரூ சர்வதேச விமான நிலையம், தனது சரக்கு முனையத்தை கடந்த 5-ம் தேதி சுங்க அனுமதி பெற்ற சரக்கு போக்குவரத்தை தொடங்கியுள்ளது. 

இதன்மூலம், கோவை ஏற்றுமதியாளர்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பும் தங்கள் சரக்குகளை கோவை, இருகூரிலேயே சுங்கத்தீர்வை செய்து கொள்ளலாம். சுங்கத்தீர்வை செய்யும் சரக்குகள் உடனுக்குடன் பெங்களூர் விமான நிலையத்திற்கு சுங்க அனுமதி பெற்ற லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 

அங்கிருந்து புறப்படும் விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்கின்றனர். இதுவரை இந்த வசதியை பயன்படுத்தி கனடா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின்  போன்ற நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கோவையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் சரக்குகளை கோவையில் இருந்தே ஏற்றுமதி செய்வதோடு, பொருளாதார ரீதியாகவும் பயன்பெறுவதாக முனையத்தின் அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...