பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவோர் மீது நடவடிக்கை கோரி மனு

பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவதாகக் கூறி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி மணிபிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கு இடம் விற்ற பணம் 4 லட்சம் ரூபாயை கைமாறாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் திரும்பக் கேட்ட போது திலகவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததாகவும், குண்டர்கள் சிலரை வைத்து கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் மற்றும் மிரட்டல் விடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது குழந்தைகள் மூவருடன் வந்து மனு அளித்தார்.

கந்து வட்டி விவகாரத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...