எலும்பு பிரச்சனைகளை தடுக்க 50 வயதினைக் கடந்தவர்களுக்கு விழிப்புணர்வு தேவை

கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனையில் "உலக எலும்புப்புரை நாள்" விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது, தங்களின் வழக்கமான வேலைகளை பாதிக்கும் எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவுகளை தடுக்க 50 வயதினைக் கடந்தவர்களுக்கு முறையான விழிப்புணர்வு தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, கங்கா மருத்துவமனை எலும்புப் புரை துறை தலைவர் மருத்துவர் எஸ்.ராஜசேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு வருடமும் உலக அளவில் 8.9 மில்லியன் மக்கள் எலும்பு முறிவுகள் மற்றும் எலும்புப்புரையின் விளைவாக பாதிக்கப்படுகின்றனர். 50 வயதைக் கடந்த மூன்றில் ஒரு பெண்ணிற்கு ஆஸ்டியோபோரோடிக் என்னும் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது "நுண்ணிய எலும்பு" என்று பொருள். ஒரு நுண்ணோக்கியின் கீழ் பார்த்தால், ஆரோக்கியமான எலும்பு ஒரு தேன்கூடு போல் தோன்றுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் போது, ​​தேன்கூடு போன்றுள்ள துளைகள் மற்றும் இடைவெளிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை அறியலாம்.



இதுபோன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சை மற்றும் தினசரி பணிகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றார். 

எலும்புப்புரை நோய்க்கென சிறப்பு சிகிச்சைகளை வழங்கும் வகையில் கங்கா மருத்துவமனையில் டெக்ஷா ஸ்கேன், இரத்தப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பு வழிமுறைகளுக்கு மருத்துவ வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, புகழ்பெற்ற பேராசிரியர் பிரவீன் சுல்தானா "வல்லமை தாராயோ" என்னும் கருவின் கீழ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...