வாழத்தக்க கோவை அதுவே எங்கள் லட்சியம்


ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் கோவை மாவட்டமானது ஒருநல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும். அதில் பயணிக்க, உழைப்பும், நெஞ்சுறுதியும் இருந்தால் போதும். தற்போதைய தொழில்நகரமாக இருக்கும் கோவை, 20-ம் நூற்றாண்டின், ஆரம்பத்தில் சொல்லும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு சிறு கிராமமாக இருந்தது. அப்போது, கடுமையான பஞ்சமும் plague நோயும் தலைவிரித்தாடின.

கோவையில் "ஸ்க்ரூடிரைவர் கலாச்சாரம்" கடைபிடிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தாலும், எந்த மூலக்காரணிகளும் இல்லாமல், தானாக முன்னேறி வந்திருக்கிறது. அதேபோல, வருமானத்தில், சென்னைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. தட்ப வெப்ப நிலையும் எல்லோரையும், மூத்த குடிமகன்களையும் சேர்த்து கவர்வதாக அமைந்துள்ளது. 

SWOT. ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் , கோவை மாவட்டத்தில் பல்வேறு வலிமையான வளங்கள் உள்ளன. குறிப்பாக, ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நல்ல தகுதிகளுடன் வெளியே வருகின்றனர். அவற்றில் மருத்துவம் மற்றும பொறியியல் துறைகளும் அடங்கும்.

கோவை பொறியாளர்கள், எல்லா முக்கிய நிறுவனங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கிறார்கள். இதேபோல, கோவை மருத்துவர்கள் உலக அளவில் புகழ். பெற்று இருக்கிறார்கள்.

கோவையில், கடந்த 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் பெருமை சேர்க்கின்றன.

கனவு காணுங்கள் என்றார் நமது விண்வெளி நாயகன் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இதேபோல, "ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று" கனவு கண்டார் பாரதியார் சுதந்திரம் வருவதற்கு 30 ஆண்டுகட்கு முன்பே.

நாமும் கனவு காணலாம்

மிகப்பெரிய மாநகரமாக ( MEGAPOLIS) உருவெடுப்பதற்கான அனைத்து தகுதிகளும் நிறைந்தது கோவை. அப்படிப்பட்ட, நகரமாக உருவெடுப்பதற்கு தேவையான அனைத்தையும் கோவை மாவட்டம் பெற்றிருப்பதாக சிம்ப்ளிசிட்டி நிறுவனம் நம்புகிறது , பம்ப்செட், வெட்கிரைண்டர் உள்ளிட்ட சகல தொழில்களும் அவரவர்கள் அனுபவித்த போராட்டத்திற்கு பிறகுதான் உருவானவை . 

பெண் உரிமைக்காக போராடியவரும், பிரிட்டிஷ் சமூகவாதியுமான அன்னிபெசன்ட் அம்மையார் ஒரு முறை கூறுகையில், நகர் என்றால் " மக்கள் வாழ்வதற்கான இடம்" எனக் கூறியிருந்தார். 

தற்போது, மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது, நமது நகரமும் வளர்ந்து கொண்டே வருகிறது, ஆனால் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறான நகரத்தை நாம் உருவாக்கி இருக்கிறோமா ? 

நாம் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பல அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில் தற்போது வாழ்ந்து வருகிறோம். தண்ணீர் தட்டுப்படும் கோவையும் ஒரு இணை பிரியாத நண்பர்கள். தற்போது சிறுவாணி, பில்லூர் திட்டங்களினால் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. இது ஒருபுறம் இருக்க, அத்திக்கடவு, அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டமானது இன்னும் நிறைவேற்றாமலேயே கிடக்கிறது. நொய்யல் ஆறு, தற்போது கூவமாக உருவெடுத்து வருகிறது. 

40,000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டும், வெளிநாடுகளுக்கு நேரடி விமானசேவை இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. இதேபோல, பெரும்பாலான ரயில்களும், கோவையில் நிறுத்தப்படுவதில்லை. எனவே, சாலை மார்க்கமான போக்குவரத்தே இப்போது, நமக்கு சாதகமான ஒன்றாக உள்ளது. ஆனால், நகரில் உள்ள சாலைகள் தரமானவையா தரமற்றவையா..? அவைகள் சிறப்பானதாக உள்ளனவா அல்லது போதுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுகின்றது. பல்வேறு திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே இடம்பெறுகின்றன. 

இதைப்போல என்னவொணா கேள்விகள்! 

நமது சிம்ப்ளிசிட்டியில், இதுபோன்ற அத்தியாவசியமான செய்திகளை விரைவில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்போம். ஒவ்வொரு துறையையும், அலசி ஆராய்வோம். எங்களிடம் அனுபவமும் உள்ளது; இளைஞர்களும் உள்ளனர். அவர்கள் மூலமாக, உங்களது அடிப்படை தேவைகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவோம். நாங்கள் உங்களுக்கு உண்மையான செய்திகளை, உடனுக்குடன் வழங்குவோம். உங்களது கண்கள் மற்றும் செவிகளாக உங்களுக்கு சேவைகளை ஆற்றுவோம்.

நாங்கள் சிறிய செய்தி நிறுவனம் என்றாலும், எங்களிடம் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. எங்கள் வலைத்தளத்தில் ஆங்கிலம் தமிழ் இரண்டு பகுதிகளும் உள்ளன. அவரவர் விரும்பும் மொழியை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம். ஆடியோ (audio), வீடியோ (video) வசதிகளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளன. வாரம் சுமார் 6 லட்சம் பயன்பாட்டாளர்கள் எங்களது வலைதளங்களில் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். இந்த வளர்ச்சியானது, வெறும் ஒரு வருடத்தில் ஏற்பட்டதாகும். 

அனைத்து ஆறுகளும், சிறியவையாகதான் பிறந்தன. ரோம் ஒரே நாளில் உருவாகவில்லை. இந்த இரண்டு உண்மைகளையும் நாங்கள் நம்புகிறோம்.

எங்களது ஓரே குறிக்கோள் உங்களது வளர்ச்சி,  மகிழ்ச்சி, ஆரோக்கியம், மற்றும் அமைதியான வாழ்க்கையே ஆகும். 

இது கோவை மக்களுக்கு நாங்கள் அளிக்கும் உறுதிமொழியாகும். 

உங்கள் ஆதரவும், அதை விடவும் உங்களது கருத்துக்களும்  எங்களுக்கு தேவை .

"இடிப்பாரை இல்லா ஏமரா  மன்னன் கெடுப்பார்  இலானும் கெடும் ".

நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை .

நன்றி 

சத்யமூர்த்தி கோவிந்தராஜன்  

Newsletter

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...