பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாழ்வியல் நெறியூட்டும் நிகழ்ச்சி “நெல்லிக்கனி” திட்டம் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாழ்வியல் நெறியூட்டும் நிகழ்ச்சி “நெல்லிக்கனி” திட்டம் தொடங்கப்பட்டது. 

கோவையில் ரோட்டரி கிளப் கோயமுத்தூரின் சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக, நெல்லிக்கனி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான விழா கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மேஜர். டோனர் திரு.பி.பி. சுப்பிரமணியம் கலந்து கொண்டார். 

விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் சாண்டியாகோ ஜேசு கூறியதாவது :- நெல்லிக்கனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் ஊட்டுவது தான். சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களின் புதல்வர்கள் தான் பெரும்பாலும், அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர், பள்ளிப் படிப்பை முடிப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு உத்வேகம் அளித்து, அவர்களை பெரிய சாதனையாளர்களாக மாற்றுவதே இந்த நெல்லிக்கனி புரோஜக்ட் முக்கிய குறிக்கோள். இதன் மூலமாக தேசிய கட்டமைப்பில் நாங்கள் முக்கிய பங்களிப்பை வழங்க உள்ளோம். 

இந்தத் திட்டத்தின்படி, ரூட்ஸ் குரூப்ஸ் ஆப் கம்பெனிகள் இயக்குநர் கவிதாசன் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு அரசுப் பள்ளிகளை பார்வையிட்டு, அங்கே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்றுவார். நெல்லிக்கனி திட்டம் துவங்கியதில் இருந்தே, அந்தத் திட்டம் வெற்றி பெற பல்வேறு உதவிகளையும் கவிதாசன் தொடர்ந்து செய்து வருகிறார். இந்தத் திட்டத்தின் மூலமாக, சுமார் ஒரு லட்சம் மாணவர்கள், 2400 ஆசிரியர்களும் பலன் அடைவர். 

கடந்த 70 ஆண்டுகளாக, மக்கள் சேவையில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கிளப் பல்வேறு சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ரூ.69 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியிலும் இந்தக் கிளப் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்தக் கிளப் திப்பனூர் மற்றும் பன்னிமடை ஆகிய கிராமங்களை தத்தெடுத்து, அங்கே வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 



விழாவில் மாணவ மாணவியர்களுக்கு வானம் தொடலாம் வாங்க என்ற நூலை வெளியிட்டு மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்களையும் நெல்லிகனிகளை சிந்தனைக் கவிஞர் டாக்டர்.கவிதாசன் வழங்கினார். 



Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...