கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் - கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் அளித்திருப்பது கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கயிறு கண்காட்சியில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் கோவை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில், கயிறு தொழிலில் உள்ள பல நுட்பமான விஷயங்கள் மற்றும் இயற்கை உரங்கள் ஆகியவை குறித்து கண்காட்சி மூலம் அறிய முடிந்தது. இதன்மூலம் கயிறு பொருட்கள் ஏற்றுமதி பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கயிறு பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ரூ.1,630 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.2,860 கோடியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் ரூ.20,000 கோடி என்ற அளவுக்கு மாறி மிகப்பெரிய பொருளாதார சந்தையாக இந்தியா மாறும். மேலும், கடுமையான வறட்சி காரணமாக இந்த ஆண்டு கயிறு உற்பத்தி மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருந்தும். சர்வதேச அளவில் 80 சதவீதத்தை தக்க வைத்து இந்தியா முன்னனியில் உள்ளது. 

இதேபோல, நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை கயிறு வாரியம் என்றாலே கடந்த ஆண்டு வரை ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை இந்த ஆண்டு ரூ.500 கோடியாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.  கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து கயிறு பொருட்கள் உற்பத்தியில் கூட்டு முயற்சிக்கு ஜப்பானியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  முதல் முறையாக ஜப்பானின் ஆர்டர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...