பழைய கடன்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு


பழைய கடன்களை ரத்து செய்துவிட்டு புதிய கடன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருந்தாலும் முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 



மேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழமேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.

எனவே, வறட்சி நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கடன் பெற்று வறட்சியால் செலுத்த முடியாத விவசாயிகளின் கடனை ரத்து செய்துவிட்டு, இந்த ஆண்டு சாகுபடிக்கான புதிய கடன்கள் வழங்க வேண்டும்.

பயிற்காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இருப்பதை மாற்றி தேசிய காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...