கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தீபாவளிப் பண்டிகையையொட்டி, அரசின் உரிமம் பெற்று தற்காலிகப் பட்டாசுக்கடை வைத்துள்ளார். இவர், நேற்று விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று (16.10.2017) மீண்டும் கடையை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அசோக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள்கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போத்தனூர் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பலர் இது போன்ற தற்காலிகப் பட்டாசுக்கடை அமைத்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பிற பட்டாசுக்கடைக்காரர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.