முறையாக ஊதியம் வழங்கக் கோரி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


கோவை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக ஊதியம் வழங்கக் கோரி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்மாவதி மருத்துவ மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மாதம் தோறும் 8,200 ரூபாய் சம்பளம் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 8,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் 1,000 ரூபாய் தொழிலாளர் வைப்பு நிதியாக பிடிக்கப்படுவது வழக்கம். விடுப்பு இல்லாமல் அனைத்து நாட்களும் எட்டு மணிநேரத்திற்கு ஒரு குழுவாக, மூன்று பிரிவுகளில் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுப்பு எடுத்தால் ஐந்தாயிரம், நான்காயிரம் என முறையான கணக்கு இல்லாமல் ஊதியம் பிடித்து வழங்குவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகைக்கான வைப்பு நிதியின் கணக்கு எண்ணைக் கேட்டால் நிறுவனத்தினர் தவறான எண்ணை வழங்குகின்றனர். அந்த எண்ணில் வைப்புத்தொகை பூஜ்யம் என காட்டுகிறது. 

பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், இன்று தங்களுக்கு பண்டிகைக்கால போனஸ் மற்றும் வார விடுமுறை, சம்பளத்தொகை அனைத்தையும் அச்சடித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வேலையை புறக்கணித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டதில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களுடன் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி மகேஷ்வரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு மற்றும் வைப்பு நிதி பிடித்தம் சம்பந்தமாக அனைத்து தகவல்களும் விரைவில் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி மருத்துவ மேலாண்மை நிறுவனம் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ்-வின் உறவினர் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...