9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இன்று (அக்.,14) அதிகாலை விவசாய நிலத்துக்குள் உடல்நலக்குறைவால் சுருண்டு விழுந்த காட்டு யானை 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடைப் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அச்சுறுத்தி வருகின்றன . இந்த நிலையில், இன்று (அக்.,14) அதிகாலை யானைக் கூட்டங்கள் மதுக்கரை சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்செய்துவந்தன. 

அப்போது, அதில் ஒரு பெண் யானை ஒன்று உடல்நலகுறைவால் விவசாய நிலத்திலேயே சுருண்டு விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் யானையை எழுப்பி, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். எந்த முயற்சியும் பலனளிக்காததால், மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான வனத்துறையின் மருத்துவக்குழு விரைந்து வந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

சுமார் 9 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, கிரேனின் உதவியுடன் 40-வயது மதிக்கத்தக்க அந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானையை காப்பாற்றிய வனத்துறையின் மருத்துவக் குழுவிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் பெரியநாயக்கன்பாளையம் பாலமலைப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க யானைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...