கோவை மாவட்டம், வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் நில வேம்பு கசாயத்தை வால்பாறை நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம், வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமலிருக்க நிலவேம்பு கசாயம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை வட்ட சட்டப்பணிக்குழு மற்றும் அரசு ஆரம்ப சுகாதா நிலையம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?.. டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது, டெங்கு காய்ச்சலை பரவாமல் எப்படி தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறி அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதர நிலைய வட்டார மருத்துவர் பிரவீன், மருத்துவர் வித்யா மற்றும் அரசு அதிகாரிகளும், வால்பாறை வட்ட சட்டப்பணிக்குழுவினரும் உடனிருந்தனர்.