குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வாசீம் என்பவர்  தனது மனைவி ஜோஹரமா மற்றும் மகள் அன்ஃபியா, மகன் பர்ஹான் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே, குடும்ப பிரச்சினை நிலவி வந்த சூழலில், கடந்த 2015ம் ஆண்டு தனது மனைவி ஜோஹரமாவை, வாசிம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் அரசு தரப்பில் 14 சாட்சியங்களும், 7 வயது மகள் முக்கிய சாட்சியாகவும் விசாரிக்கப்பட்டனர்., வழக்கின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இன்று (அக்.,14) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளி வாசீமிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி குணசேகரன்  தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, குற்றவாளி வாசீம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...