கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையால் வடகோவைப் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புகைப்படம்: விக்ரம்
கடந்த சில நாட்களாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. தொடர்ந்து, இன்றும் (அக்.,14) பெய்த திடீர் மழையால் வடகோவை மேம்பாலம் பகுதியில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள .குண்டும் குழியுமாக இருப்பதன் காரணமாக, சாலைகளில் நீர் தேங்கிருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.