கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக இன்று டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் திமுக சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதில், கோவை மாநகராட்சியின் புதிய வரி சீராய்வு, குப்பைகளுக்கு வரி, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகை வசூல், டெங்கு காய்ச்சல், விஷக் காய்ச்சல் கட்டுப்படுத்த தவறியது உள்ளிட்டவை குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.