கோவையில் டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்- மாநில அரசைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதில் கோவையில் தற்போது வரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அறிவித்து வரும் தமிழக அரசு அதனை ஒழிக்க எவ்வித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று தேமுதிக சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தேமுதிக காட்டன் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெங்கு காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

இந்தி ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...