மனைவியை கணவன் அடிக்கலாம் : பீஹார் பெண்கள் அதிர்ச்சி பதில்

'மனைவி வாக்குவாதம் செய்தால், அவரை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உள்ளது' என, பீஹாரில், 37 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறையின் உதவியுடன், தொண்டு நிறுவனம், பீஹாரில், பெண்களின் மனநிலை தொடர்பாக, விரிவான கருத்துக் கணிப்பை, சமீபத்தில் நடத்தியது. இதில், பீஹார் பெண்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

'கணவனிடம், மனைவி வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது; அவ்வாறு ஈடுபடும் மனைவியை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு' என, அம்மாநிலத்தைச் சேர்ந்த, 37 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 'பண்பாடு, விதிமுறைகளை மதித்து நடக்காத மனைவியை அடிக்கும் அதிகாரம், கணவனுக்கு உண்டு' என, 41 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுபோலவே, 'உடலுறவுக்கு மறுக்கும் மனைவியை, கணவன் அடிக்கலாம்' என, பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், வீடு அல்லது குழந்தைகளை கவனிக்காமல் விட்டால், மனைவியை, கணவன் அடிக்கலாம் என, 35 சதவீத பெண்களும், உரிய முறையில் சமையல் செய்யா விட்டால், மனைவியை, கணவன் அடிக்கலாம் என, 30 சதவீத பெண்களும், கூறியுள்ளனர்.

அதேசமயம், 'மனைவியை, கணவன் அடிக்க தகுந்த காரணம் இருக்க வேண்டும்' என, வேலைக்கு செல்லும் பெண்களில், 56 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 'உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால், மனைவி மறுப்பு தெரிவிப்பது தவறில்லை' என, 80 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...