கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் தொடங்கி, 5000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தி வருகிறார்.
இவரது மகள்களான கீதா, லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்து இருந்தார்.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்த கீதா மற்றும் லதா ஆகியோரை மூலை சலவை செய்த ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நான்தான் கடவுள் எனக்கூறியதோடு சகோதரிகளான இருவருக்கும் திருமணம் நடக்காமல் இருக்க மொட்டை அடித்துள்ளார்.
மேலும், காவி உடைகளை அணிவித்து ஆசிரமத்திலேயே தங்க வைத்து விட்டாதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து, தங்களது குழந்தைகளை பார்க்க ஈஷா மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இருவரையும் மீட்டுத்தருமாறும் கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடமும் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து சகோதரிகள் இருவரும் விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கியிருப்பதாக கோவை முதன்மை நீதிபதியின் நேரடி விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், பெற்றோர்கள் தங்களை சந்திக்க தடை விதிக்கக்கோரி கீதா மற்றும் லதா ஆகியோர் தொடுத்த வழக்கு விசாரணை திங்களன்று நீதிபதி மலர்மன்னன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.