கனமழையால் கொள்ளளவை எட்டும் சிறுவாணி அணை

மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக - கேரள எல்லையோர வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணை, கோவை மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமாக உள்ளது. இந்த அணையில் இருந்து பெறப்படும் நீர், மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை குறைந்ததால், அணையில் நீர் தேக்க முடியாத சூழல் நிலவியது. 

இந்நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும், சிறுவாணி அணைக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது.

கடந்த சில நாட்களாக கேரள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான முத்திகுளம், பாம்பாறு, பட்டியாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாக கூடியிருப்பதால்,  ‘டெத் ஸ்டோரேஜ்’ எனப்படும் இறுதிகட்ட கொள்ளளவை நீர்மட்டம் எட்டியுள்ளது. 

சிறுவாணியின் அடிவாரத்தில் 24 மி.மீ. மழையும், அணைப்பகுயில் 102 மி.மீ. மழையும் பெய்துள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், மொத்த கொள்ளளவை விரைவில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைய நீர் இருப்பு 877.50 டி.எம்.சி. ஆகும். பாசன வசதிக்காக அணையில் இருந்து நாளொன்றுக்கு வினாடிக்கு 75.50 மில்லியன் லிட்டர் நீர் திறக்கப்படுகிறது. 

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...