நவராத்திரி பண்டிகையின் கொலு வழிபாடுகளில் ஜெயலலிதாவின் சிலைகள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் கடந்த 21-ம் தேதி தொடங்கி நாளை (29.09.2017) வரை கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். 

மேலும், நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு கோயில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொலு வைத்து வழிபாடு நடத்துகின்றனர். கொலு பொம்மைகளில், பெரும்பாலும் கடவுள்களின் சிலைகளே இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது, கொலு பொம்மைகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொம்மைகலும் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். 



ஜெயலலிதா என்றாலே, அவர் முதலமைச்சராக இருந்த போது உடுத்திய பச்சை நிற ஆடையுடன்தான் நியாபகத்திற்கு வருவார். எனவே, பச்சைநிற சேலை அணிந்தது போன்றே ஜெயலலிதாவின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தில் கொலு வைக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இது தொடர்பாக ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனையாளர் பேசுகையில், ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். பச்சை நிறம் கொண்ட சேலையுடன் இருக்கும் பொம்மைகளை மக்கள் அதிகளவு விரும்புகின்றனர். தற்போது, ஜெயலலிதாவின் கொலு பொம்மைகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இவ்வாறு, அவர் கூறினார். 

இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா, தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் வேறு மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு, முன்மாதிரியாக இருந்து வருகிறார். 

கொலு பூஜையில் ஜெயலலிதாவின் பொம்மைகள் இடம் பெறுவது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகையில்,  தமிழக பெண்கள் ஜெயலலிதாவை, தங்களது காப்பாளராக பார்க்கின்றனர். கொலு பூஜையில் அவரது சிலை கடவுலுக்கு நிகராக மதித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகள் ரூ.250 முதல் ரூ.1,200 வரையில் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கோவை பூம்புகார் கைவினைப் பொருட்கள் அங்காடியில் ஜெயலலிதாவின் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...