கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை சேகரிப்பு மற்றும் சாக்கடை சுத்தப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மக்கள் குப்பையை பிரித்து வழங்குமாறும் வலியுறுத்தினார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பல்வேறு சுகாதார மற்றும் தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



பீளமேடு பாரதி காலனி பகுதியில் அமைந்துள்ள கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்திற்கு வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.



தொடர்ந்து பிஆர்பி கார்டன் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை வார்டு கவுன்சிலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து தரும்படி கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.



பீளமேடு பாரதி காலனி பகுதியிலும் குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் தினசரி சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.



பீளமேடு டிஸ்பென்சரி ரோடு பவுண்ட் ரோடு பகுதியில் சாலையோரத்தில் உள்ள சாக்கடை மண்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள சாக்கடை மண்களை முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் வலியுறுத்தினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...