கோவை ஜவகர் சிறுவர் மன்ற பள்ளியில் சிறார்களுக்கு கட்டணமில்லா கலைப் பயிற்சிகள்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு கட்டமில்லா கலைப் பயிற்சிகள் மற்றும் விஜயதசமி அன்று சிறப்பு சேர்க்கைகள் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கோவை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர் சேர்க்கை தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் கலைகளை பயிலும் வண்ணம் கட்டணமில்லா பகுதி நேர கலைப் பயிற்சியினை அளித்து வருகிறது. கோவை ஜவகர் சிறுவர் மன்றம், மலுமிச்சம்பட்டியில் இசைக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.

இம்மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கீபோடு ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 3.30 முதல் 5.30 வரையிலும், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இயப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.300 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெரும் சிறார்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.

தொடர்ந்து, செப்டம்பர் 30ம் தேதியன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு சேர்க்கை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 97515 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...