தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதாவின் கைரேகை விவகாரம் - தேர்தல் ஆணைய செயலர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் நடந்தது. அப்போது, அதிமுக பொதுச்செயலர் என்ற வகையில், வேட்பாளர்களுக்கான விண்ணப்ப படிவத்தில் அரசு மருத்துவர்கள் முன்னிலையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மேலும், அவர், போஸ் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், வேட்பு மனு தாக்கலின் போது அளித்த விண்ணப்பப் படிவத்தில் ஜெயலலிதா வைத்திருந்த கைரேகை உண்மை தன்மையை ஆராய வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி ஆகியோரை விளக்கமளிக்க உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் அதிகாரி லக்கானி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இன்று, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிமுக வேட்பாளரின் விண்ணப்பப் படிவம் ஏற்று கொண்டதாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் வரும் அக்டோபர் 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...