முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 நாட்களுக்கு ஓருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. ஆனால், கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.



இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தினை முற்றுகையிட்டு திடீர்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழியும் நிலையில், இந்த முறை 20 நாட்கள் கடந்தும் குடிநீர் வழங்கப்பட வில்லை என  போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார். 



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், குழாய்களில் பாதிப்பு இருந்தால் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.



மேலும், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றும், அதுவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். கிழக்கு மண்டல அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சீரான குடிநீர் கேட்டு போராட்டம் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...