உதவித்தொகை பெறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்-ஆட்சியர்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக உதவித்தொகை பெறும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பொருட்டு தங்களது ஆதார் அட்டை நகல், சாதிச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ, அல்லது தபால்மூலமாகவோ அனுப்பிவைத்து இத்திட்டத்தின்கீழ் தொடர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...