கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் இன்று (21.09.2017) முதல் வரும் 30-ம் தேதி வரை பகுதி தூரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், பல ரயில்கள் தாமாதமாகவும் இயக்கப்படுகின்றன.
ரயில் எண் : 56604 கோவை - சொரனூர் பயணிகள் ரயில் சேவை 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதி தூரம் வரை இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:
தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:
ரயில் எண் : 56604 கோவை - சொரனூர் பயணிகள் ரயில் சேவை 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதி தூரம் வரை இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:
- ரயில் எண் : 66605 கோவை - சொரனூர் ரயில் ( பாலக்காடு ரயில்நிலையம் - சொரனூர் ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).
- ரயில் எண் : 66604 சொரனூர் - கோவை ரயில் ( சொரனூர் ரயில்நிலையம் - பாலக்காடு ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).
தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:
- ரயில் எண் : 22609 மங்களூரூ - கோவை இன்டர்சிட்டி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் 21,22,25,26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
- ரயில் எண் : 56323 கோவை -மங்களூரூ அதிவேக பயணிகள் ரயில் 21.09.2017 முதல் 25.09.2017 வரை மற்றும் 30-ம் தேதியில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.