பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் இன்று (21.09.2017) முதல் வரும் 30-ம் தேதி வரை பகுதி தூரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், பல ரயில்கள் தாமாதமாகவும் இயக்கப்படுகின்றன. 

ரயில் எண் : 56604 கோவை - சொரனூர் பயணிகள் ரயில் சேவை 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பகுதி தூரம் வரை இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:

  • ரயில் எண் : 66605 கோவை - சொரனூர் ரயில் ( பாலக்காடு ரயில்நிலையம் - சொரனூர் ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).
  • ரயில் எண் : 66604 சொரனூர் - கோவை ரயில் ( சொரனூர் ரயில்நிலையம் - பாலக்காடு ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).


தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:

  • ரயில் எண் : 22609 மங்களூரூ - கோவை இன்டர்சிட்டி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் 21,22,25,26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
  • ரயில் எண் : 56323 கோவை -மங்களூரூ அதிவேக பயணிகள் ரயில் 21.09.2017 முதல் 25.09.2017 வரை மற்றும் 30-ம் தேதியில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...