ஸ்மார்ட் ரேசன் கார்டில் அடுத்தடுத்து நிகழும் புகைப்பட குளறுபடி! - நேற்று காஜல்...இன்று தேசியகொடி..நாளையாவது தடுப்பார்களா அதிகாரிகள்..?

சேலம் மாவட்டம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் திருப்பூர் மற்றும் தர்மபுரியில் விநாயகர் சுவாமி படம், செருப்பு அணிந்த கால் மற்றும் நாயின் புகைப்படங்கள் அடுத்தடுத்து மாறி பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், பழனி அருகே உள்ள ஆயக்குடி ஓபுலாபுரம் ஒட்டர்தெருவைச் சேர்ந்தவர் தயாள் சுல்தான் காதர் ராவுத்தர். இவருக்கு குடிமைப் பொருள் பிரிவு சார்பில் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட்டது. அதில் குடும்ப தலைவரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் தேசிய கொடியின் படம் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். 

இது குறித்து பழனி வருவாய்த்துறையினரிடம் கேட்ட போது, ஸ்மார்ட் கார்டுகள் அனைத்தும் சென்னையில் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சிலரது கார்டுகளில் புகைப்படங்கள் மாறி விடுகின்றன. அதே போல்தான் ஆயக்குடியைச் சேர்ந்த ஒருவரது ஸ்மார்ட் கார்டிலும் புகைப்படம் மாறியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மாற்று கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட ஸ்மாரட் ரேசன் கார்டுகளில் புகைப்படங்கள் மாறி வருவது பயனாளிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில் இதுபோன்ற புகைப்படங்கள் மாறி வருவதை தடுக்க, அதிகாரிகள் கவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...