வேளாண் பல்கலை முன்னாள் முதல்வரின் லேப்-டாப் திருட்டு- கண்காணிப்பு கேமிராவில் பதிவானது கொள்ளையன் உருவம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன்னுசாமி (63). தற்போது பணி நீட்டிக்கப்பட்டு அப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், பொன்னுசாமியின் லேப்-டாப்பை திருடிச்சென்றார்.



ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் அந்த லேப்-டாப்பில் இருப்பதாகவும் உடனடியாக கண்டுபிடித்து தரும்படியும் பொன்னுசாமி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், லேப்டாப்-ஐ திருடிச்சென்ற ஆசாமியின் உருவம் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.



தொடர்ந்து, லேப்டாப்-ஐ திருடிச்சென்ற மர்ம நபரின் புகைப்படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...