கோவையில் கட்டிடக்கலைக் குறித்த 3 நாள் கண்காட்சி செப்., 22-ம் தேதி தொடக்கம்


ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் கட்டுமான தொழில் மற்றும் கட்டிடக்கலைத் தொடர்பான கண்காட்சிகளை தென்னிந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை முதலில் சென்னையில் சி.ஏ.ஐ. கண்காட்சி 2017 என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் மூலம் தொழில்நிறுவனம், கட்டிடப் பணியாளர்கள், கட்டமைப்பினர் மற்றும் கட்டுமான உபகரணங்களை செய்வர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் பாலமாக உள்ளது. 

இந்த நிலையில், "சி.ஏ.ஐ. கண்காட்சி 2017" என்ற கண்காட்சியை கோவையில் நடத்த ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் கட்டிடக்கலையில் உள்ள சிறந்த படைப்புகள், புதிய தயாரிப்புகள் மற்றும் யோசனைகளை பறிமாறிக் கொள்ள உதவியாக அமையும். 

கோவையில் நடக்கும் கண்காட்சிக்கு டைட்டில் ஸ்பான்சர் தூசன் பாப்கேட் ஆகும். மேலும், டெக்னோரெயில், நிப்பான் பெயிண்ட், ஜெம் பெயிண்ட், பிரைம், கமய் எலிவேட்டர்ஸ் மற்றும் கிளாஷிக் கிச்சன் போன்றை கோ-ஸ்பான்சர்களாக உள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கண்காட்சிகள், அதிக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்டிருப்பதால், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டில், சென்னை, கோவையை தொடர்ந்து, ஐதராபாத், கோவா போன்ற நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...