வால்பாறை முக்கிய சாலையில் மரம் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சாலையின் குறுக்கே மரம் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி- வால்பாறை வரையிலான மலைப் பாதையானது 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. அடர்ந்த மலைத் தொடரின் குறுக்கே செல்லும் இந்த மலைப்பாதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் பாதையாகும்.

இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரச்சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.



கடந்த சனிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் வால்பாறை செல்லும் 22-வது கொண்டை ஊசி வளைவில் மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த சாலை வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



தொடர்ந்து, பயணிகள், பொதுமக்கள், வனத்துறையினருடன் இணைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்குப் பின் அதிகாலை சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...