சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியரிடம் மனு


சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



இது தொடர்பாக தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும், அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...