தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் - சபாநாயகர் தனபால் அதிரடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் கடந்த மாதம் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர். இதனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதனையடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், சபாநாயகர் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில், விளக்கம் அளிக்காத தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குடகு சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் அடுத்தது என்ன நடக்கும் என அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...