கோவையில் சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் வழங்கி கவுரவிப்பு

பெரிதும் கொண்டாடப்பட்ட வெள்ளிவிழா பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமான ஜே.கே. சிமெண்ட் லிமிடெட், இந்த ஆண்டுக்கான சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் வழங்கும் விழாவில் 26வது பதிப்பை கோயம்புத்தூரில் நேற்று நடத்தியது.

இந்திய கௌரவம் மிக்க இந்த விருது விழாவில், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகரும் மற்றும் முன்னாள் தலைவருமான மு.ராதாகிருஷண்ன் மற்றும் ஜே.கே. சிமெண்ட்டின் ராகவ்பட் சிங்கானியா ஆகியோர் பங்கேற்றனர். தொழில்துறை முன்னோடிகளில் தீவிர பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் 26-ம் பதிப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் வழங்குவது ஜே.கே. சிமெண்ட் நிறுவனத்தின் வருடாந்திர முக்கிய நிகழ்வாகும். இதன் இலக்கு, உலகளாவிய அளவில் மிகச்சிறந்த திறமைசாலிகளை அங்கீகரித்தல் மற்றும் ஊக்குவித்தலாகும். தனது வெற்றிகரமான இயக்கத்தை தொடரும் வகையில், இந்த ஆண்டு ஜே.கே. சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் 199 நுழைவுகள் சமர்பிக்கப்பட்டன

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை வழங்கப்படும் மிகுந்த கௌரவம் வாய்ந்த விருதான “கிரேட் மாஸ்டர்ஸ் விருது” கட்டிக்கலை பிரிவில் பல ஆண்டுகளாக மிகச்சிறந்த செயல்பாட்டினை மேற்கொண்டு வரும் கட்டிடக்கலை நிபுணர் ஷிரிஷ் பெரிக்கு  வழங்கப்பட்டுள்ளது. பூனாவில் ஸ்லம் ரீஹெபிலேஷன் திட்டத்தை மேற்கொண்ட கட்டிடக்கலை நிபுணர் பிரசன்னா தேசாயிக்கு ஆண்டின் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் விருது வழங்கப்பட்டது 

இவை தவிர்த்து, இந்த ஆண்டின் கிரீன் அர்க்கிடெக்சர் விருது குஜராத்தைத் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் உதய் மற்றும் மௌசமி அந்தாரே ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இளம் மற்றும் திறமைமிக்க வளரும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான விருதுகள் வழங்கப்பட்டன. விருது வகையினங்களில், கட்டிடக்கலை பிரிவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான அங்கீகாரமும் உட்பட்டுள்ளது. இளம் கட்டிடக்கலை நிபுணர் விருதை பெங்களுரூவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதீப் ஸ்ரீனிவாஸ் பெற்றார். ஆர்க்கிடெக்ட் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் விருது, பீகாரைச் சேர்ந்த தீபன் போஸ் என்பருக்கு, அவரது நிமாட்லா கட்டில் மேற்கொள்ளப்பட்ட “கிரீமடோரியம் கம் மெமோரியல் காம்பிளெக்ஸ்” திட்டத்திற்காக வழங்கப்பட்டது. இளம் ஆர்க்கிடெக்ட் விருது, கேரளாவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஹரிதாவிற்கு, அவரது “சென்டர் ஃபார் ஹார்மோனியஸ் லில்லிங்” திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

எல்லா ஆண்டுகளையும் போல்,யுலுயு அனைத்து எல்லைகளையும் கடக்கும் வகையில், ஃபோகஸ் கண்ட்ரீஸ் ஆர்க்கிடெக்ட் ஆஃப் தி இயர் விருதை வழங்கியது. இந்த ஆண்டு, வெளிநாடுகளுக்கான ஆர்க்கிடெக்ட் ஆஃப் இயர் விருது, தாக்காவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஜுபையர் ஹாஸனுக்கு, அவரது லூம் ஷேட் திட்டத்திற்காக வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு பிரிவுகளிலும் விருகள் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் விழாவின் வெற்றி குறித்து ஜே.கே. சிமெண்ட் லிமிடெட்டின் தலைவர் மேலாண்மை இயக்குனர் யதுபதி சிங்கானியா பேசுகையில், 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவின் வெள்ளி விழாவைக் கொண்டாடிய பிறகு, மீண்டு ஒரு முறை, மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்கிய கட்டிடக்கலை நிபுணர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகளை வழங்குவதில் ஜே.கே. சிமெண்ட் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. இன்னும் கட்டிடக்கலை பிரிவில் பல்வேறு விருதுகளையும் மற்றும் பாராட்டுதல்களையும் பெற்றுக் குவிக்கவுள்ள இந்த விருது வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் அவர்கள் இன்னும் அதிக வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள், ஆழ்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் பரிசீலனைகளுக்குப் பின்பு, கவனமான சோதனை மற்றும் திட்டமதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டபின் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  நடுவர்கள் குழுவின் தலைவராக, ஜே.கே. சிமெண்ட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் யதுபதி சிங்கானியா விளங்கினார். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பிரபலமான கட்டிடக்கலைஞர்களுடன், பேராசிரியர் சேத்தன் வைத்யா, கட்டிடக் கலைஞர். பாலகிருஷ்ணா ஏ.தோஷி, கட்டிடக்கலைஞர் முசு ஜெய்ஸிம்ட உட்பட பல்வேறு பிரபலங்களும் இக்குழிவில் இடம்பெற்றனர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...