பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் தூய்மையை கடைபிடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்க துவக்க விழா நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தூய்மையே சேவை என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தூய்மையே சேவை இயக்கம் நமது மாவட்டத்தில் 15.02.2017 முதல் 02.10.2017 வரை நடத்தப்பட்டு வருகின்றது. இம்முகாமில் அனைத்து அலுவலர்களும் முழு ஈடுபாடுடன் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வுகளில் ஈடுபடவுள்ளனர். அனைத்து நிகழ்வினையும் ஆவணப்படுத்தி அரசுக்கு தங்களது பணிகளை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



மேலும், இது தொடர்பாக தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வின் வாயிலாக பொதுமக்கள் அனைவரும் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றம் இதர இடங்களில் தூய்மையை கடைபிடிப்போம் என்றும் வீடுகளில் கழிப்பறைகளின் பயன்பாட்டினையும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியனை ஏற்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடபிரிய உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...