நிரம்பி வழியும் நிலையில் அவினாசி குளம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரை திறந்து விடும் அதிகாரிகளை தடுக்கும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அசனெல்லி பாளையத்தில் இருக்கும் குளமும் இந்த மழையால் முதல் முறையாக நிரம்பியது. 



இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி, குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்றது. எனவே, சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல,  அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குளத்தின் அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி விட்டு, குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நகராட்சியின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குளம் நீரின்றி வறண்டு கிடந்த போது பொதுமக்கள் அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாகவும், தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

இதனால், நேற்று (10,09,2017) இரவு பொதுமக்கள் ஏராளமானோர் போரட்டத்தில் ஈடுபட்டதால், குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

இதேபோல, அதே பகுதியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பிய போதும், அதிலிருந்து நீரை வெளியேற்றவும், குளத்தை தூர்வாருவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதைக் கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...