குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி 6000 கி.மீ பயணித்த கோவை இளைஞர்

குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி காஷ்மிரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட கோவை இளைஞர் தற்போது கன்னியாகுமரி வந்தடைந்தார்.



கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த தண்டபாணி லோகநாதன் சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சைக்கிளிங் பிரியரான இவர் ஈரோடு, சேலம், உதகை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கேரள மாநிலம் வரை பல்வேறு சமூக விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

இதன் ஒருபகுதியாக குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கினார்.

ஆகஸ்ட் 15 அன்று காஷ்மீரில் தண்டபாணி லோகநாதன் துவங்கிய இந்த பயணம் ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, தில்லி, உத்திரபிரதேஷ், மத்தியபிரேதேஷ் உள்ளிட்ட 13 மாநிலங்களின் வழியாக ஆறாயிரம் கிலோ மீட்டர் பயணமடைந்து ஆகஸ்ட் 24ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தார்.

இவருக்கு, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை பொது ஆய்வாளர் உள்ளிட்டோர் வரவேற்பளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...