பம்புசெட், உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினைக் குறைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை குறைக்கக்கோரி கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். அதில் பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரியினால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி எண் இருந்தால் மட்டுமே பெரிய நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் வழங்குகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகளான பம்புசெட், கம்ப்ரசர்கள் உள்ளிட்டவற்றிக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரியினை குறைக்கவில்லை எனில், போராட்டங்களும் நடத்தப்படும். 

இவ்வாறு பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...