அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் விநியோகம்


அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல் நிலை தேர்வு பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வரும் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலமாக வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவுள்ளது.

விண்ணப்பங்கள் பெறுவதற்குறிய வழிமுறைகள்:-

விண்ணப்பங்கள் பெறம் மாணவ, மாணவியர்கள் (ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் மற்றும் இத வகுப்பினர்) கல்வித் தகுதி சான்றிதழ், கல்வி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்று மற்றும் குடும்ப அட்டை நகல்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி:-

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.இ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.எஸ்.சி (அக்ரி), பி.வி.எஸ்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் அனைத்தும்.

வயது வரம்பு: (01.08.2018)

1. அனைத்து வகுப்பினருக்கும் குறைந்த பட்ச வயது வரம்பு 21

2. அதிக பட்ச வயது இதர வகுப்பினர் 32. மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பிலிருந்து கீழ்க்கண்டவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

3. ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றம் பழங்குடியினர் 5 வருடம்

4. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினர் 3 வருடம்

5. மாற்றுத் திறனாளிகள் 10 வருடம்.

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் ஆவர்.

விண்ணப்பங்கள் திரும்ப ஒப்படைக்க கடைசி நாள் 20.9.2017 மாலை 5.45 மணி.

விண்ணப்பங்களை கீழ்க்கண்ட அலுவலகத்தில் நேரில் பெற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரில் ஒப்படைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்களை கோரினாலோ அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைத்தாலோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், இந்த வருடம் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் Offline-யில் விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஏதாவது ஒன்றில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்.

பூர்த்தி செய்து மீண்டும் ஒப்படைக்கும் இடம் - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...