பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட்டில் சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி, நெக்ஸ்மோ மொபைல் மற்றும் ஐஓடி சென்டர் திறப்பு விழா

சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமி மற்றும் நெக்ஸூ மையம் ஆப் எக்ஸலன்ஸ் ஆய்வகங்களின் திறப்பு விழா இன்று பிஎஸ்ஜி கோவை நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச்-யில் நடைபெற்றது.

பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூஷன்ஸ் கல்லூரி தலைவர் எல்.கோபாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர், மற்றும் நெக்ஸ்மோ சொலுயூசன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி திறப்பு விழா சிஸ்கோ பிராந்திய அகாடமி தென் மண்டல துணை மையத்தில் எம்.ஸ்ரீவல்சன் தலைமையிலும், நெக்ஸ்மோ சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் (மொபைல் மற்றும் ஐஓடி)-இன் தொடக்க விழா நெக்ஸ்மோ சொலுயூசன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். பாண்டியராஜன் தலைமையில் அந்தந்த ஆய்வகங்களிலும் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமியில் ஒரு கல்வியாளர் உறுப்பினர் பொருப்பேற்று அதன் மூலம் மாணவர்களுக்கான சிசிஎன்ஏ சான்றிதழ் படிப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிசிஎன்ஏ நான்கு தொகுதிகளாக ரூட்டிங் மற்றும் எசென்ஷியல்ஸ் மாற்றியமைத்தல் குறித்து உள்ளடக்கியது. 

நெக்ஸ்மோ நிறுவனத்தின் சிறப்பு மையத்தின் மூலம் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடையே நெக்ஸ்மோ பணியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் திட்டங்கள் செய்ய முடியும். இதன்மூலம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அதே நிறுவனத்தில் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...