தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஊக்க தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

தேசிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017- 2018 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கான விண்ணப்பங்களை வரும் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கக கோரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 13,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-7-2016 முதல் 30-6-2017 முடியவுள்ள காலகட்டத்தில் தேசிய அளவிலான விளையாட்டில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். குழு போட்டிகளில் முதல் 2 இடங்களையும், தனியார் போட்டிகளில் முதல் 3 இடங்களையும் பிடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகங்களில் 10 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கூடுதல் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தை 044- 28364322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...