கோவை மாநகராட்சி ஆணையர் எழுதிய புத்தகம் ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியானது

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய புத்தகம் சனிக்கிழமையன்று அவரது தாயார் உமா கண்ணன் நினைவாக ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய இரண்டாவது புத்தகம் "அதுவும் இதுவும்". இதனை விஜயா பதிப்பகம் பதிவிட்டுள்ளது. முன்னதாக, கோவில்பட்டி நகரில் துணை ஆட்சியராக இவர் பணியாற்றியபோது இவரது முதல் புத்தகம் வெளியிடப்பட்டது.



அரசு வேலை தொடர்பான அந்த முதல் புத்தகத்தினை விகடன் பதிப்பகம் வெளியிட்டது. 

விஜயகார்த்திகேயன் அவர்களின் தந்தை வன (நிர்வாகம்) கூடுதல் முதன்மை தலைமை ஆலோசகர், ஆர்.கண்ணன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, தனது மகனின் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை விவரிக்கும் வகையில் உண்மை சம்பவங்களை விளக்கும் வகையில் இப்புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் கலைஞரான சிவக்குமார் வாழ்வில் முக்கிய 14 அம்சங்களை விளக்கினார். 



இதனைத்தொடர்ந்து, பேசிய சிறுதுளி வனிதா மோகன், க.விஜயகார்த்தியேன் அவர்களையும், அவரது புத்தகம் குறித்தும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், விஜயகார்த்திகேயன், மக்களை பல்வேறு விஷயங்களில் முன்னேற்றி வருவதாகவும், கற்றலை ஊக்கப்படுத்தி வருவதாகவும் வாழ்த்தி பேசினார்.

இதனை அடுத்து பேசிய க.விஜயகார்த்திகேயன், தனது நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு சிறந்த வழி புத்தகம் எழுதுவது என்றும், அந்த புத்தகம் பிறருக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதியதும் குறித்து விவரித்தார். தொடர்ந்து, இதுபோன்ற செயல்களில் மக்களும், படைப்பாளர்களும் ஈடுபடும்போது அவை மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறினார்.



மேலும், சமூகத்தில் உள்ள மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் இப்புத்தகத்தை எழுதியுள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...