நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது- புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது எனவும், மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காது. தமிழக அரசு மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், உடனடியாக தரவரிசை பட்டியலை வெளியிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும். 

மேலும் அதிமுக கட்சி பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம். அதனை அக்கட்சியினர் பேசி தீர்த்துக் கொள்வார்கள். புதிய தமிழகம் கட்சி கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றாக இருப்பதாலேயே பாஜக-வை ஆதரிக்கிறோம். எங்கள் கொள்கை நாட்டின் நலனுக்கானது.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...