கோவை- பெங்களூர் இடையே ‘டபுள் டக்கர்' உதய் ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோவையில் துவக்கம்


இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை அடுத்த மாதம் கோவை மற்றும் பெங்களூரு இடையே இயக்கபடும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா சென்ற வாரம் கோவை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வந்த போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த மாதம் கோவை வருகையின் போது இதனை உறுதிசெய்தார். தற்போது, இதற்கான நடவடிக்கை முழுவீச்சில் வேகமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் முதல் முறையில் இயக்கப்பட்டது. தற்போது கோவை - பெங்களூர் இடையே இரவு நேர பயணத்துக்காக இந்த ரயில் கோவையில் இயக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, சோதனை ஓட்டம் நடத்துவதற்காக இன்று சென்னையில் இருந்து இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயில் மூன்று பெட்டிகளுடன் ஜோலர்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு 12 மணியளவில் வந்தடைந்தது. இதனை கோவை ரயில்வே மேலாளர் மற்றும் பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.



இது குறித்து, கோவை ரயில்வே துறை மேலாளர் சின்னராஜு கூறுகையில், இரட்டை அடுக்கு கொண்ட (டபுள் டக்கர்) ‘உதய்’ ரயில் கோவை - பெங்களூர் இடையே இயக்குவதற்காக சென்னையில் இருந்து மூன்று பெட்டிகளுடன் கோவைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணராயபுரம், பெங்களூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலின் உயரம் 4.36 மீட்டர் கொண்டதால், இந்த ரயில் இயக்கும் வழித்தடத்தில் வேலைப் பணிகள் தற்போது முடிந்துள்ளது. இதன் அகலம் சாதாரண ராயிலைப் போன்றே 3.05 மீட்டர் கொண்டுள்ளது. இதற்கான 10 இணைப் பெட்டிகள் விரைவில் கொண்டுவரப்படும். அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி உள்ளதால் ஜெனரேட்டர் வசதிக்கென தனிப் பெட்டிகள் இதில் இருக்கும்.



இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதியுடன் நவீன வடிவமைப்பில் உள்ளது. இதில் பயோ-கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் தற்போது சோதனை ஓட்டத்தின் போது 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...