நீலகிரியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

 

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் நாளது வரையில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகிற 31.08.2017 அன்று இம்மாவட்டத்தில், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகூர், தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, உல்லத்தி, கடநாடு, இத்தலார், கக்குச்சி, நஞ்சநாடு மற்றும் பாலகொலா ஆகிய 10 கிராம் ஊராட்சிகளிலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேனாடு, கெங்கரை, கொணவக்கொரை, நடுஹட்டி மற்றும் நெடுகுளா ஆகிய 5 கிராம ஊராட்சிகளிலும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதுமலை ஊராட்சியில் அனைத்து இல்லங்களிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகளை கட்டப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உதகை பிரீக்ஸ் பள்ளியில், முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஸ்கிருஸ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...